2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சென்னையில் கொள்ளையடித்த இரு இலங்கையர்கள் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுங்க அதிகாரிகள் போல் நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

47 வயதுடைய பெண் ஒருவர், திங்கட்கிழமை இலங்கையிலிருந்து விமானத்தில் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைப் பிரஜைகளான 31 மற்றும் 40 வயதுடைய குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண்னை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி, தங்களை சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகை மற்றும் வளையல்களை இருவரும் எடுத்துச் சென்றனர். சந்தேகமடைந்த அவர், சுங்கத்துறைக்கு சென்று அவர்கள் மீது புகார் அளித்தார். பின்னர் பொலிஸில் புகார் அளித்தார். இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X