2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிகிச்சை பெற்ற பெண் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிப்பு

Gavitha   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபே பகுதியிலுள்ள போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர், சந்தேகத்துக்கிடமான முறையில் நேற்று உயிரிழந்துள்ளதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொம்பேயை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த பெண், அந்த வைத்தியசாலையல் சிகிச்சை ஒன்றை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக, சங்கம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும்  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறு நடைபெறுவது சாதாரண விடயம் என்றாலும், குறித்த வைத்தியசாலை, சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கமைய செயற்படவில்லை என்றும் அந்தச் சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .