2025 மே 19, திங்கட்கிழமை

சிங்கப்பூருக்கு பிரதமர் இன்று பயணம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வியாழக்கிழமை (15) சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இவருடன் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் பிரதமருடன் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதுடன், இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு சிங்கப்பூரின் ஆதரவையும் நிதியுதவிiயும் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடலும் நடைப்பெறவுள்ளது.

மேலும் இலங்கையின் பொருளாதாரத்தில் முதலிடுதற்கு ஆர்வமாக உள்ள சிங்கப்பூர் முதலீட்டாளர்களை கவரும் முகமாகவும் இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X