2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சுசந்திகாவுக்கு இப்போது எப்படி?

George   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நோய்க்கு ஆளாகியிருக்கலாம் என்று  தியதலாவை ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள ஓட்டவீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, படிப்படியாக குணமடைந்து வருகிறார் என டொக்டர் ரஞ்சன் சமரகோன் தெரிவித்துள்ளார்.

திடீரென்று ஏற்பட்ட சுகவீனம் காரணமாக, தியதலாவை வைத்தியசாலையில் சுசந்திகா ஜயசிங்க, நேற்று அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு தொடர்ந்தும் சிசிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. சுசந்திகாவின் உடல்நிலை குறித்து கருத்து தெரிவிக்கையில் டொக்டர் ரஞ்சன் சமரகோன், இதனைக் கூறியுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகவே சுசந்திகா, தியதலாவைக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .