2025 மே 19, திங்கட்கிழமை

சீனாவின் உதவிக்கு ஜனாதிபதி பாராட்டு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார்.

சீன கம்யூனிஸ கட்சியின் பிரதித் தலைவரும் சீன தேசிய மக்கள் காங்கிரஸ் நிலையியற் குழுவின் பிரதித் தலைவருமான சாங் பாஓவென் உள்ளிட்ட சீன கம்யூனிஸ கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், இன்று செவ்வாய்க்கிழமை (20) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

இதேவேளை, இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் சீன கம்யூனிஸ கட்சிக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X