2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

செயற்றிறன்மிக்க கண்காணிப்பு முறைமைக்கு இணக்கம்

Gavitha   / 2017 ஜனவரி 03 , மு.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

இலங்கை - இந்திய மீன்பிடிப் பிரச்சினையில், சரியான எல்லையில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான செயற்றிறன்மிக்க கண்காணிப்பு முறைமை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதற்கு, இரு தரப்பினரும், நேற்று இணக்கம் தெரிவித்தனர். 

மீனவர்கள் பிரச்சினை தொடர்பான, இலங்கை மற்றும் இந்தியா மீன்பிடி அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை, நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்தப்  பேச்சுவார்த்தையின் போது, இரு நாட்டு மீனவர்களுக்கும் காணப்படும் பிரதான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், இரண்டு நாடுகளினால் தடுத்து வைக்கப்படும் மீனவர்களை சட்டரீதியான முறையில் விடுதலை செய்யப்படுவதற்கு துரிதமான நடவடிக்கைகளை எடுத்தல் போன்றன இதன்போது கலந்துரையாடப்பட்டன.

மேலும், இந்த அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டது.

மேலும், இருநாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் போதோ அல்லது மற்றைய செயற்பாடுகளின் போதோ, தாக்குதலுக்கு உட்படவில்லை என்றும் அவர்களுடைய சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்றும், இதன்போது தௌவுபடுத்தப்பட்டது.

இதேவேளை, சரியான எல்லையில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான செயற்றிறன்மிக்க கண்காணிப்பு முறைமை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைகளை முன்வைப்பதற்கு, இரு தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .