Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் நடந்த ஊழல்,மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு, பொதுமக்களின் முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கோருகிறது.
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்கு நிறுவப்பட்ட ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு, பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற எதிர்பார்க்கிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025 ஜூன் 30ஆம் திகதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, 2025 ஜூலை 01 ஆம் திகதி எடுக்கப்பட்ட இலக்கம் 25/1145/801/018 என்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு நிறுவப்பட்டது,
அதன்படி, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றின் ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற குழு எதிர்பார்க்கின்றது. இது தொடர்பில் ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2025 செப்டெம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் psicairport@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி (Email) அல்லது 070-3307700 என்ற Whatsapp எண்ணுக்கு தமது கோரிக்கைகளை அனுப்பி, திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யுமாறு ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு கேட்டுக்கொள்கிறது.
3 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
27 minute ago
2 hours ago