Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 20 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதன் ஊடாக, ஜனாதிபதித் தேர்தலை இவ்வருடம் நடத்தாமல் விடுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதென தெரிவித்த ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பத்தரமுல்லயில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
“ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையால், அரசாங்கம் தற்போது பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது” என்றார்.
விசேடமாக அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள 30/1 யோசனைக்கமைய, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் முன்வைக்கப்படும் என்றும், அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மூச்செடுப்பதைத் தவிர ஏனைய அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரவாத நடவடிக்கையென சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதென்றும் தெரிவித்தார். அரசாங்கம் இந்தச் சட்டத்தை, 2018 ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தது.
இந்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அதனை நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தச் சட்டத்தின் ஊடாக அரசின் அதிகாரத்தை இல்லாமல் செய்வதுடன் பயங்கரவாத சந்தேகநபர்களுக்கு விசேட சலுகைகள் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரசமைப்பின் 20ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் தற்போது மக்கள் விடுதலை முன்னணியுடன் அரசாங்கம் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதென்றும் தெரிவித்தார்.
32 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
2 hours ago