Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மார்ச் 21 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதில், அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (Samuel Paparo) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் வௌ்ளிக்கிழமை (21) நடைபெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேநேரம், இந்து சமுத்திர வலயத்தை பாதுகாத்து அமைதியான இந்து சமுத்திர வலயத்தை பேணுவதற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பையும் அட்மிரல் பபாரோ பாராட்டினார்.
இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்காவிற்கு இடையில் காணப்படும் வலுவான தொடர்புகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லவும், இலங்கை அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்கிக்கொள்ளவும் தனது ஒத்துழைப்பை வழங்குவதாக அட்மிரல் ஜே.பபாரோ தெரிவித்தார்.
இலங்கையின் பாதுகாப்பு துறையின் மனித வள அபிவிருத்திக்கு ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்ப காலத்திலிருந்து இதுவரையில் வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது நன்றி தெரிவித்தார்.
வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) லெப்டினன் கேணல் அன்டனி நெல்சன், ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் சிரேஷ்ட வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் டேவிட் ரென்ஸ் (David Ranz) உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
8 minute ago
18 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
51 minute ago