Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2024 ஒக்டோபர் 07 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் உயர் கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு தருவதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாவை மோசடி செய்து தலைமறைவாக இருந்த ஜப்பானிய மொழி ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக ஹொரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் பயன்படுத்திய சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிரான நான்கு முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய ஹொரணை நகருக்கு அருகில் உள்ள தங்கும் இடத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஜப்பானில் வேலை மற்றும் உயர்கல்விக்கான ஆன்லைன் முறையில் ஜப்பானிய மொழியை கற்பிப்பதாக கூறி பெற்றோர்களை ஏமாற்றி தலா ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் மூன்று இலட்சம் ரூபாவிற்கு மேல் பல பணத்தை பெற்றுக்கொண்டமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் தெஹியத்த கண்டிய புலத் சிங்கள, மத்துகம, தெபுவன, பெலியஅத்த, மொரவக்க, தங்காலை மற்றும் வெல்லவாய பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago