2026 மே 14, வியாழக்கிழமை

ஜூனில் வருகிறது கொவிட் சட்டமூலம்

Niroshini   / 2021 மே 24 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காலப்பகுதியில், பொதுமக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான “கொவிட் 19 சட்டமூலம்” அடுத்த மாதம் முதல் வாரத்தில், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என, நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் செய்துகொள்ள அல்லது கிடைக்கப்பெறாதவற்றை பிற்காலத்திலேனும் பெற்றுக்கொள்வதை, இந்தச் சட்டம் உறுதிப்படுத்துவதோடு, தொற்றுப் பரவல் காலத்தில், ஒன்லைன் முறைப்படி மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளைச் சட்டரீதியாக உறுதி செய்துகொள்வது, இந்தச் சட்டமூலம் ஊடாக நிறைவேற்றப்படும் என்றும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் வெகு விரைவில் அது, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .