Editorial / 2021 மே 29 , மு.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூன் மாதம் 2ஆம் திகதியிலிருந்து 5,000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த சமூர்த்தி, வீட்டு பொருளாரம்,நுண்நிதி, சுய வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக மேம்பாட்டு இராஜாங்கஅமைச்சர் செஹான் சேமசிங்ஹ முதலாவதுதாக சமூர்த்தி பயனாளிகளுக்குஅத்தொகையை வழங்கவும் விரைவாக சகலருக்கும் வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

“தற்போதைய கொரோனா தொற்றையும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள
பயணக் கட்டுப்பாட்டையும் கவனத்தில்கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும்
கலந்தாலோசித்தே இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளனர்” என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,அரசாங்கத்தால் ஏற்கெனவே வழங்கப்படும் கொடுப்பனவுகளில், ரூ.5,000யை விடவும் குறைந்த தொகையை பெறும் நபர்களுக்கும் 5,000 ரூபாயை வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறுவோருக்கும் கிடைக்குமெனத் தெரிவித்த அவர்,
60- 65 இலட்ச குடும்பதொகுதிக்கு வழங்குவதற்குத் தேவையான நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
14 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago