Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 ஜனவரி 08 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றாவின் விளக்கமறியல் வெள்ளிக்கிழமை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு 05ம் திகதி வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் அச்சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் அன்றையதினம் மாலை நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டனர்.
இதற்கமைய இன்றையதினம் (08) குறித்த வழக்கானது நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சங்க தலைவிக்கு வெள்ளிக்கிழமை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
க. அகரன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
17 minute ago