Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
 கடந்த அரசாங்கத்தில் சதொச நிறுவனத்தில் பணிபுரிந்த 153 பணியாளர்களை அரசியல் நடவடிக்கைகக்காகப் பயன்படுத்தி,அரசாங்கத்துக்கு 40 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெரணான்டோ உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில், எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அத்துடன், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதவான் சிறைச்சாலை அதிகாரியிடம் உத்தரவிட்டுள்ளார்.
2010- 2014 வரையான காலப்பகுதியில் சதொச நிறுவனத்தில் கடமையாற்றிய 153 பேரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அதன்மூலம் அரசாங்கததுக்கு நட்ட்தை ஏற்புடுத்தியமைத் தொடர்பில், இலஞ்ச ஆணைக்குழுவால், இலஞ்சம் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
31 Oct 2025