Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சரும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சதொசவுக்கு உரிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினாரென, ஜோன்ஸ்டன் எம்.பி உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி தரப்பு சாட்சிகளை அழைக்காமலே, மூவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்தார்.
வழக்கின் முன்னதான விசாரணையின் போது, முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியை விசாரணை நிறைவில், அந்த சாட்சி ஆதாரங்கள் நிரூபிக்கப்படமுடியாமையால், நீதிபதி மேற்படி வழக்கை, நேற்றையதினம் வரையிலும் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதிவாதித்தரப்பு சட்டத்தரணிகள், முறைப்பாட்டாளரின் சாட்சிகள், ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளன. அந்தச் சாட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை ஆகையால், வழக்கை நிறைவுக்குக் கொண்டுவருமாறு கோரிநின்றனர்.
அதனையடுத்தே, பிரதிவாதிகளின் சாட்சிகளை அழைக்காமலே, வழக்கை நீதிபதி நிறைவுக்கு கொண்டுவந்தார்.
அதனடிப்படையில், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பி, அவருடைய பிரத்தியேக செயலாளர் மொஹமட் சாஹீர், சதொசவின் முன்னாள் தலைவர் நளீன் பெர்ணான்டோ ஆகியோரே, வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாண சபைக்கான கடந்த தேர்தலின் போது சதொசவுக்கு உரிய 37 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தினர் என்று இந்த மூவருக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த மூவரையும், வழக்கு விசாரணை நிறைவடையும் வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, இதற்கு முன்னர் நீதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago