Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜோர்தானில் சட்டவிரோதமான தங்கியுள்ளவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு காலத்தை அறிவித்துள்ளது.
செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுமன்னிப்புக் காலத்தில் தொழில் வீசாவில் வருகைதந்து வீசா காலம் நிறைவடைந்தும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அபராதம் செலுத்தாமல் அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்ப முடியும்.
எனினும், சுற்றுலா வீசாவில் சென்று வீசா காலம் நிறைவடைந்தும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அபராத தொகையை செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த பெப்ரவரி மாதத்திலும் இவ்வாறு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago