2025 மே 19, திங்கட்கிழமை

ஜெனீவாவை விட பரணகம அறிக்கை கடுமையானது

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையை விட, இலங்கையினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைகள், அதிகம் கடுமையானவை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை வெளியாகுவதற்கு முன்னதாக பரணகமவின் அறிக்கை வெளியாகியிருந்தால், நிலைமை இன்னமும் மோசமாக மாறியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜெனீவா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கான உள்ளப் பொறிமுறை இன்னமும் முடிவுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்த அவர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க பொறிமுறையொன்றை வழங்க வேண்டியுள்ளதாகவும், அதேநேரத்தில் நாட்டின் இறையாண்மையையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் நாட்டின் நற்பெயரையும் பாதுகாக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்தார்.

உள்ளகப் பொறிமுறை தொடர்பான எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை மறுத்த அமைச்சர் ராஜித, இலங்கையின் அடிப்படைச் சட்டங்களுக்குள்ளேயே இந்த விசாரணைகள் இடம்பெறுமெனக் குறிப்பிட்டார்.

'ஆனால், வெளிநாட்டு நிபுணர்களின் நிபுணத்துவக் கருத்தையும் ஆலோசனையையும் எவ்வாறு மேற்கொள்வது என்ற அறிவையும் பெறுவதற்கு எமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான விசாரணைகளில் அவர்களுக்கு அறிவு காணப்படுவதோடு அனுபவமும் காணப்படுகின்றது. ஆனால், இலங்கை நிச்சயமாக, கலப்பு நீதிமன்றப் பொறிமுறையைக் கொண்டிருக்கப் போவதில்லை' என அவர் தெரிவித்தார். அத்தோடு, பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, அமைச்சர் லலித் அத்துலத்முதலி, மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவே ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக வெளிநாட்டு ஆலோசனை பெறப்பட்டுள்ளதையும் அவர் நினைவூட்டினார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட, பரணக ஆணைக்குழுவுக்கு உதவுவதற்காக, சேர் டெஸ்மொன்ட் டி சில்வா தலைமையிலான நான்கு வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றதையும் அமைச்சர் நினைவூட்டினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X