Freelancer / 2025 மே 29 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி விதிப்பு, பரஸ்பர வரி விதிப்பு என பல கெடுபிடிகளை ட்ரம்ப் மேற்கொண்டு வந்தார்.
அதேபோல, அமெரிக்காவில் வாங்குவதை விட அதிகம் விற்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும் ட்ரம்ப் வரி விதித்தார்.
ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள், கடுமையான பாதிப்பை சந்தித்தன.
எனவே ட்ரம்பின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியுள்ளது. R
11 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
1 hours ago