2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள் குறித்து அதிர்ச்சி தகவல்

Freelancer   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருள் 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 

தங்காலையில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் 284.94 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 420.976 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த 3 லொறிகளினதும் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .