2025 மே 12, திங்கட்கிழமை

தண்டவாளத்தில் ஓடிய பஸ்

Editorial   / 2024 மார்ச் 09 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பஸ்ஸொன்றின் சுக்கான் இறுகியதால் அந்த பஸ், ரயில் தண்டவாளத்தில் ஓடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கனேமுல்ல புகையிரத நிலையத்தில் வெள்ளிக்கிழமை  (8) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும். அந்த பஸ் புகையிரத பாதையை சேதப்படுத்தியுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  கொழும்பு நோக்கி செல்லும் புகையிரத பாதை சேதமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

  மாலை 6.55 மணியளவில்   புகையிரத பாதையில்  பஸ் ஓடியதுடன் புகையிரத பாதையில் நிறுத்தப்பட்டதால் பிரதான வீதியில் புகையிரத போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாகவும் சம்பவம் தொடர்பில் கணேமுல்ல பொலிஸார் மற்றும் புகையிரத திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X