Freelancer / 2026 ஜனவரி 19 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை தாங்கள் மீட்டுள்ளனர் என சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய அந்தொ பகுதியில் கைவிடப்பட்டிருந்து மோட்டார் குண்டை விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட குண்டை வெடிக்க வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையைத் தாங்கள் முன்னெடுத்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)

1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago