2026 மே 14, வியாழக்கிழமை

தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் வருடாந்த விருது விழா

Editorial   / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

  தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் வருடாந்திர 'தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுப் பரிசில்கள்' வழங்கும் விழா, எதிர்வரும் 26.04.2026 அன்று மாலை 3:00 மணிக்கு கொழும்பு-14, கலைமகள் தமிழ் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மன்றத்தின் தலைவர் வீ. செல்வநாயகம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. மன்றத்தின் முன்னாள் தலைவர் அமரர் சந்தனம் அவர்களின் தன்னலமற்ற சேவைகளைக் கௌரவிக்கும் முகமாக, அன்றைய தினம் பாடசாலைப் பிரதான மண்டபம் 'சந்தனம் அரங்கு' எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • பிரதம அதிதி: கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேஷமூர்த்தி கலந்துகொண்டு, தெரிவு செய்யப்பட்ட ஆளுமைகளுக்கு நினைவுப் பரிசில்களை வழங்கி கௌரவிப்பார்.
  • சிறப்பு விருந்தினர்: கலைமகள் தமிழ் வித்தியாலய அதிபர் முருகானந்தம் கலந்து சிறப்பிப்பார்.

விருது பெற்று கௌரவிக்கப்படுபவர்கள்:

கல்வி, சமயம் மற்றும் சமூகம் சார்ந்த துறைகளில் சிறந்த சேவையாற்றிய பின்வரும் ஆளுமைகள் கௌரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்படவுள்ளனர்:

  1. ஆ. வேலுசாமி (ஓய்வுபெற்ற அதிபர்)
  2. திருமதி செ. அட்லீஸம்மா (ஓய்வுபெற்ற அதிபர்)
  3. ந. சுந்தரராஜ் (அதிபர்)
  4. து. தனராஜ் (அதிபர்)
  5. செ. ராஜசேகர் (ஆசிரியர்)
  6. பா. மனோபிரகாஷ் (ஆசிரியர்)
  7. கா. சந்திரன் (ஊடகவியலாளர்)
  8. சி. சுரேஷ் (பணிப்பாளர், லங்காஸ்ரீ)
  9. டாக்டர் மிராஷ் முக்தார்
  10. வீ. எஸ். அசோகரட்ணம்
  11. மு. மதனரூபன்
  12. ப. சேதுராமன்

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .