2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

துனித்தின் தந்தைக்காக சர்வதேச அரங்கில் மௌன அஞ்சலி

Freelancer   / 2025 செப்டெம்பர் 20 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவின் தந்தைக்காக இன்றைய (20) போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், இலங்கை அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் கையில் கறுப்புப் பட்டியை அணிந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. 

அபுதாபியில் நடைபெற்ற ஆசிய கிண்ணத் தொடரின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் துனித் வெல்லாலகேவின் தந்தை மரண செய்தியை அறிந்து உடனடியாக இலங்கைக்கு திரும்பினார். 

இந்நிலையில் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதன் பின்னர் துனித் வெல்லாலகே மீண்டும் நேற்று ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி புறப்பட்டு சென்று அணியுடன் இணைந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X