2026 மே 07, வியாழக்கிழமை

தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீர் மரணம்

Nirosh   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவைப் பிரதேசத்தில், சுயதனிமைப்படுத்தலில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொகவந்தலாவை - மோரா தோட்டத்தைச் சேர்ந்த 84 வயதுடைய நான்குப் பிள்ளைகளின் தந்தையான கருப்பையா மூக்கன் என்பவர், அவரதுப் பேரன் கொழும்பிலிருந்து வந்திருந்ததால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று (14) காலை அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் பிசிஆர் மாதிரி  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவரின் சடலம் தற்போது டிக்கோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதும், சடலம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் பொகவந்தலா பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .