Freelancer / 2026 பெப்ரவரி 14 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலங்கம, அக்குரேகொட பகுதியில் கார் ஒன்றின் மீது நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த சட்டத்தரணி 'கரன்தெனிய சுத்த' என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர்.
எனினும், தனது கட்சிக்காரரின் தகவல்களை 'லொகு பெட்டி' என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் இருந்த தம்பதியினரை இலக்கு வைத்து நேற்று மாலை 5.00 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கார் ஒன்றில் வந்த குழுவினர் டி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதில் வாகனத்தில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பிடிகல பகுதியைச் சேர்ந்த மல்வாரச்சி எனும் சட்டத்தரணியும் அவரது மனைவியும் ஆவர்.
இச்சம்பவம் குறித்து தலங்கம பொலிஸாரின் 3 குழுக்கள் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .