2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

தப்லிகி ஜமாத் அமைப்புக்கு இந்தியாவில் தடை?

Freelancer   / 2021 டிசெம்பர் 17 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தப்லிகி ஜமாத் அமைப்புக்கு இந்தியாவில் முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும்' என, மத்திய அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

விஷ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள அறிக்கை: 

தப்லிகி ஜமாத் அமைப்பு நம் நாட்டுக்கு மட்டுமின்றி உலகுக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. 

இந்த அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. 
இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தப்லிகி ஜமாத் அமைப்பு இன்று 150 நாடுகளில் பரவியுள்ளது. இந்த அமைப்பு  இந்தியா, பாகித்தான், வங்காளம் போன்ற நாடுகளை மையமாகக் கொண்டுள்ளது.

"தப்லீக் ஜமாத்" என்பதற்கு "நம்பிக்கையை வலுப்படுத்த வந்த சமுதாயம்" என்று பொருள் காணப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .