Editorial / 2026 மார்ச் 04 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை - கண்டலமை வீதியின் சிசிரவத்த சந்தியில், தம்பதி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக அழிந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டலமை பகுதியில் வசிக்கும் தம்பதியினர், தேங்காய் எண்ணெய் தயாரிப்பதற்காக ஒரு மூட்டை கொப்பரையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஆலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
திடீரென மோட்டார் சைக்கிளில் தீப்பற்றியதைக் கண்ட இருவரும், உடனடியாக அதிலிருந்து கீழே இறங்கியுள்ளனர். அவர்கள் இறங்கிய அடுத்த கணமே தீ வேகமாக பரவியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
வீதியில் எரிந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயைக் கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் கடும் முயற்சி எடுத்து தீயை அணைத்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago