2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது

Freelancer   / 2026 ஏப்ரல் 23 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.  

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள்.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள் என மொத்​தம் 33,211 இடங்​களில் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .