Editorial / 2025 ஜனவரி 12 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றி 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் என தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளத. .
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முகேஷ்குமார், மரிய ரெட்ரிக்ஷன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளில் களஞ்சியம், முனிஸ்வரன், கார்மேகம், கண்ணன், பிரியன், சவேரியார் அடிமை, மரிய ஜான் ரெமோரோ, பிரிஸ்மன் ஆகிய 8 மீனவர்கள் வடக்கு மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை கைது செய்தனர்.
8 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டு 72 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 554 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Feb 2026