Freelancer / 2026 மே 07 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி ரிசார்ட்டுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். அவர் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமி வருகை தந்தபோது, நாளைய தமிழக முதல்வர் எடப்பாடியார் என அதிமுகவினர் முழக்கமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய்.
ஆனால், ஆளுநர் அர்லேகர், விஜய்யை பதவியேற்க அழைக்கவில்லை. விஜய், மெஜாரிட்டி ஆதரவை காட்டுமாறு ஆளுநர் கேட்டதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சி, தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ளது.
மேலும் திமுக கூட்டணியில் உள்ள விசிக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகளிடமும் தவெக ஆதரவு கோரியுள்ளது. அந்தக் கட்சிகள் இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்தச் சூழலில் தான், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கப்போவதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும், தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்யமாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரிக்கு நேற்று இரவு முதல் வரத் தொடங்கினர்.
இந்நிலையில், இன்று மதியம் புதிய விடுதி வளாகத்துக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் மாறினர். இன்னும் இரண்டு நாட்களுக்கு 40 பேர் இங்கு தங்கிக் கொள்ளும் வகையில் இந்த ரிசார்ட்டில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக ஆட்சி அமைப்பதற்கு தனது மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது. கூடுதலாக 6 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் அதிமுகவில் ஒரு தரப்பினர் தவெகவை ஆதரிக்க விரும்புவதும் தெரிகிறது.
தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் அதிமுக தரப்பில் இருந்து ஒரு தரப்பினர் விலகி முடிவு எடுப்பதைத் தடுக்கும் வகையில் அக்கட்சி இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. R
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago