Kogilavani / 2017 ஜூன் 14 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியில், வெள்ளை வானில் தமிழர்கள் இருவர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை லெப்டினன் கொமாண்டர் தம்மிக அனில் மாபாவின் விளக்கமறியலை எதிர்வரும் 27ஆம் திகதிவரை நீடித்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று (13) உத்தரவிட்டது.
கொழும்பு பிரதான நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. பக்கரிசாமி லோகநாதன், இரத்தினசாமி பரமானந்தன் ஆகியோர், 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் வானொன்றில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அந்தக் கடத்தற் சம்பவத்துடன் தொடர்புடைய வான், வெலிசறை கடற்படை முகாமுக்குப் பின் பகுதியில் இருந்தாக விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.
இதனையடுத்து, வெலிசற முகாமின் அதிகாரியாக இருந்தவரும் தற்போது, கடற்படை லெப்டினன் கொமாண்டராக உள்ளவருமான தம்மிக அனில் மாபா, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
8 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
36 minute ago