Freelancer / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் எங்களது உயிர்ச்சேதம் மட்டுமல்ல தமிழ் பேசும் மக்களது இருப்புக்களும் கேள்விக்குறியாகக் கூடிய சட்டமாகவே பார்க்கவேண்டி இருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஒழுங்கமைப்பில் நேற்று (27) நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேசத்தில் இருக்கின்ற சட்டத்துக்கு முரணானதும் மோசமானதுமான சட்டமாகவே இப்பயங்கரவாதத் தடைச் சட்டம் இருந்து கொண்டு இருக்கிறது.
ஆரம்பத்தில் தமிழ் மக்கள் இச்சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் இன்று இலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.
இச்சட்டத்தினை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்காகவே தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி இந்தக் கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்து இருக்கின்றனர். இது வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல இதற்கு ஆதரவாக இலங்கையில் வாழும் அனேகர் எம்மோடு இணைந்து கைகோர்த்துள்ளனர்.
இந்த சட்டத்தினை நீக்கவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இந்நாடு பெரும் அழிவை நோக்கிச்செல்லக்கூடும். அதனால் இந்நாட்டில் வாழும் அனைவரும் இச்சட்டத்தை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக் கோரி எம்மால் முன்னெடுக்கப்படுகின்ற இப்போராட்டமானது சர்வதேசம் வரை எம்மால் எடுத்துச்செல்லப்படும் அதே வேளை, இந்நாட்டில் ஜனநாயகம் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே இச்செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றோம்” என்றார்
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago