Kogilavani / 2021 மே 04 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சனகுமார ஆரியதாஸ
தம்புள்ளை பொருளாதார மத்தியச் சந்தை, தற்காலிகமாக நாளை (5) காலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளதாக, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுச் செயலணியின் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷாந்த தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, மேற்படிச் சந்தை, கடந்த 26 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்திகளை விற்பனை செய்துகொள்வதற்கு முடியாது பாரிய பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.
இதனைக் கருத்திற்கொண்டே சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக, மேற்படிச் சந்தையைத் தற்காலிகமாகத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மேஜர் ஜெனரல் நிஷாந்த தெரிவித்தார்.
தம்புள்ளை பிரதேச செயலகத்தில் இன்று(4) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே, சந்தையை தற்காலிகமாகத் திறப்பதுத் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.
மாத்தளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், சந்தைப் பகுதியில் பொதுசுகாதா விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago