Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூலை 27 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் உள்ளே நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திருமண சேவை தரகரை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை(25) உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட தரகர் ஒரு வருடத்திற்கு முன்னர் அப் பகுதியில் உள்ள பெண் ஒருவரை ஆண் ஒருவருக்கு திருமணம் பேசி, திருமணம் முடித்து வைத்து அதற்கான தரகு பணத்தை பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஷஇந்த நிலையில் அண்மையில் குறித்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டில் பெண் தனிமையில் இருந்த போது வீட்டின் கதவை திறந்து கதவில் அவரது தொலைபேசி இலக்கத்தை பொறித்துவிட்டு சென்றுள்ளார்.
இது தொடர்பாக குறித்த பெண் தன் கணவனிடம் தெரிவித்ததையடுத்து கணவன் தொலைபேசி ஊடாக தரகரை எச்சரித்துள்ளார். இந் நிலையில் தரகர் வியாழக்கிழமை (24) பகல் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முயன்றுள்ளார். அவர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்த முறைப்பாட்டிற்கமைய 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (25) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது அவரை எதிர்வரும் 12 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கனகராசா சரவணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .