2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

தற்காலிக ஜனாதிபதியாக மஹிந்த?

Freelancer   / 2022 ஜூலை 09 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் இராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அந்த வகையில், அரசியலமைப்பின் படி தற்காலிக ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தன  பதவியேற்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக டுவிட்டர் பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சபாநாயகர் இல்லத்தில் அவசர கட்சித் தலைவர் கூட்டம் இன்று மாலை இடம்பெற்றது.

அதில், பிரதமர், அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல தலைவர்கள் ஜூம் மூலம் கலந்துகொண்டனர் எனவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

எவ்வாறாயினும், பெரும் கோரிக்கைக்கு அமைய பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுத சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X