2026 மே 14, வியாழக்கிழமை

dd

தலையை கொய்து கொலை: மேலுமிருவர் கைது

Editorial   / 2026 மே 14 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

   

அம்பலாந்தோட்டையில் "பொடி" என்றழைக்கப்படும் லக்மால் சந்தருவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 33 மற்றும் 35 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் லுணுகம்வெஹேர மற்றும் அம்பலாந்தோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 அம்பலாந்தோட்டை பகுதியில் வசித்து வந்த "பொடி" என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வாளால் வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர், அவரது தலையைத் துண்டித்து எடுத்துச் சென்று, அம்பலாந்தோட்டை வீதியில் உள்ள சிலையொன்றில் தொங்கவிட்டுச் சென்றிருந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .