2024 ஜூலை 27, சனிக்கிழமை

தாலியை தட்டிவிட்ட மணப்பெண்: தேம்பி தேம்பி அழுத மாப்பிள்ளை

Editorial   / 2024 ஜூன் 10 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

போட்டோ ஷுட்டில் மணமக்கள் படுஉற்சாகமாகவும், மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். அதற்கு பிறகுதான், இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் மாப்பிள்ளை தேம்பி தேம்பி அழுதுள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்தவர் அந்த இளம்பெண். இவருக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இறுதியில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தார்கள்.

தற்கு பிறகு இளம்பெண்ணும், அந்த இளைஞரும் செல்போனில் பேசி பழகி வந்தார்கள். மற்றொருபக்கம் இரு வீட்டிலுமே திருமண ஏற்பாடுள் பலமாக நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், இவர்களுக்கு திருமண தேதி குறிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள், அதாவது போட்டோ ஷூட் நடந்துள்ளது.

இதற்காக மணமக்கள் குடும்பத்தினரும், மண்டபத்துக்கு உற்சாகமாக வந்தனர். மணமகன், மணமகள் இருவருமே போட்டோ ஷூட்டில் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். போட்டோ ஷூட்டினை, இருவருமே உற்சாகத்துடன் நடத்தினர்.

இதற்கு பிறகு, மறுநாள் திருமணம் என்பதால், விடிகாலையிலேயே உற்றார்கள், உறவினர்களுக்கு திருமண மண்டபத்தில் குவிய துவங்கினர். மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் தயாராகி மேடைக்கு வந்துவிட்டனர்.

திருமண மண்டபத்தில் முகூர்த்த நேரமம் நெருங்கிய போது, மணமகன் தாலி கட்ட வந்துள்ளார். அப்போது திடீரென மணமகனை படக்கென்று கீழே தள்ளிவிட்டார் மணமகள். அத்துடன், அவரது கையிலிருந்த தாலியை பிடுங்கி எறிந்து, கல்யாணத்தையும் நிறுத்தினார். இதனால், மண்டபத்திலிருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள். ஆனால், மணமகள் எந்த காரணத்தையும் சொல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார்..

இதையடுத்து, என்ன ஏதென்று, இரு வீட்டு பெரியவர்களும் மணப்பெண்ணிடம் விசாரித்தார்கள். அதுவரை வாய் திறக்காமல் இருந்த மணப்பெண், தனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று சொன்னார்.
 

இதைக்கேட்டதும் மண்டபத்தில் அனைவருமே திகைத்து போனார்கள். ஆனால் மாப்பிள்ளையோ, கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார். இதைப்பார்த்து கலங்கிப்போன மாப்பிள்ளையின் குடும்பத்தினர், திருப்பூர் தெற்கு பொலிஸூக்கு புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில், இருதரப்பிலும் போலீசார் பேச்சுவார்த்தையை நடத்தி, அவர்களை சமாதானம் செய்தார்கள். எனவே, இது சம்பந்தமாக வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்கிறார்கள்.

 

ஆனால், உண்மையிலேயே கல்யாணத்தை மணப்பெண் ஏன் நிறுத்தினார் என்று தெரியவில்லை. நிச்சயதார்த்தம் முடிந்ததும், கடந்த 2 மாதங்களாகவே மணமகனுடன் நன்றாகவே பேசி வந்தாராம் மணப்பெண்.

இவர்கள் 2 பேரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பேசி கொள்வதை பார்த்துதான், இருவீட்டிலுமே திருமண வேலையை நம்பிக்கையுடன் செய்திருக்கிறார்கள். ஆனால், தாலி காட்டும் நேரத்தில், காரணத்தையும் சொல்லாமல், திடுதிப்பென திருமணத்தை மணப்பெண் நிறுத்திய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை தந்துவிட்டது.

அதைவிட முக்கியமாக, திருமணத்துக்கு முந்தின நாள் எடுத்த போட்டோ ஷூட்டில், மணமக்கள் இருவருமே படுகுஷியில் இருப்பதை பார்த்து, இருதரப்பு குடும்பத்தினரும் குழம்பி போயிருக்கிறார்களாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .