Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R. Yasiharan / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100 வயது) உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (30) உயிரிழந்தார்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் காந்தி நகருக்கு பிரதமர் மோடி சென்று தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், தாயார் ஹீராபென் உடலை சுமந்தபடி சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன. இந்நிலையளில், இந்திய பிரதமர் மோடியின் தாயாரின் மறைவை அடுத்து சர்வதேச நாடுகளில் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள், கலைத்துறையினர் என பலரும் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
தாயின் மரணத்தை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன். 100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
50 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago