Editorial / 2024 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரயில் நிலையங்களுக்கு அண்மையில் நிறுத்திவைக்கப்படும் ரயில் பெட்டிகளில், திருகு இணைப்புகளைத் திருடினர் என்ற குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்மலானை ரயில் தண்டவாளத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத பெட்டிகளில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான இரும்புத் தொகுதிகளை திருடிச் சென்ற குற்றச்சாட்டில் இவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு இரும்பு சாதனங்களுடன் இருவரை புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சந்தேக நபர்கள் இரண்டு ரயில் பெட்டிகளை இணைக்கப் பயன்படுத்தப்படும் இரண்டு திருகு இணைப்புகளைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்மலானை, பிலியந்தல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 22 மற்றும் 29 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களாவர்.
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
58 minute ago