Editorial / 2026 ஜனவரி 18 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருமண கோலத்தில் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த சடலத்துக்கு அருகில் ஆணொருவரும் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள பட்டி கும்ஹாரா கிராமத்தை சேர்ந்தவர் யாசூல்(வயது 20). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த முஸ்கான்(வயது 18) என்ற பெண்ணும் அங்குள்ள கைவிடப்பட்ட வீட்டின் அருகே இருந்த மரத்தில் தொடங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் இளம்பெண் முஸ்கான் திருமண கோலத்தில் இருந்துள்ளார். முஸ்கான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவார். அதே போல் யாசூல் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்களா? என சந்தேகம் எழுந்த நிலையில், இருவரின் குடும்பத்தினரும் இதனை மறுத்துள்ளனர்
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிஸார் உயிரிழந்த இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
28 minute ago
3 hours ago
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
12 Mar 2026