2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

J.A. George   / 2022 டிசெம்பர் 28 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின், உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டில் தீப்பிடித்து, அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

தகவல் அறிந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர்,  உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் குமார், “மௌ மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்  பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். விசாரணையின்  அடுப்பிலிருந்து தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .