Janu / 2024 ஏப்ரல் 07 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரகஹஹேன தல்கஹவில மாலோஸ் கால்வாய் சந்திக்கு அருகில், முச்சக்கர வண்டி ஒன்றின் மீது காரில் வந்த குழுவினால் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது .
கிரிபிட்டிய, பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ரூபசிங்க ஆராச்சிகே நயனானந்த மற்றும் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த வசந்த பெரேரா ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ள நிற காரினால் வந்த குழுவொன்றே குறித்த தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரும் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த இருவரும் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago