2025 மே 02, வெள்ளிக்கிழமை

துப்பாக்கி சூட்டில் இரு கொள்ளையர்கள் பலி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியவெவ - வெவேகம வீதியில் மகாவெலிகடர சந்தியில் வைத்து தங்கநகை கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கொள்ளையர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமஹாராம தெவரவவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்ததாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சூரியவெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று கொள்ளையர்களை துரத்திச் சென்றுள்ளனர்.

இதன்போது, கொள்ளையர்கள் பொலிஸ் வாகனத்துக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபோது, பதிலுக்கு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொள்ளையர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில், பொலிஸ் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X