Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 19 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேரர்கள் மீது மேற்கொள்ளபட்ட கண்ணீர் புகை தாக்குதல் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த, தேரர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொள்ள உத்தரவிட்டவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி அறிக்கையொன்றை வெளியிட்டே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் தேரர்கள் சிலர் இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு மனுவொன்றை கையளிக்கப்பதற்காக வருகைத் தந்த போதே, இந்தத் தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டது.
தேரர்கள் இன்று ஜனாதிபதியை சந்திப்பது குறித்து முன்கூட்டியே அறிவிக்கவில்லையென்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குறித்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து சுமூகமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட ஜனாதிபதி , அத்தேரர்களினால் கலபொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைத்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் பெற்றுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
57 minute ago
3 hours ago
4 hours ago