Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கு எவராலும் முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
“ இந்தியா டுடே” பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் நிலைத் தொடர்பில், சர்வதேசம் புரிந்துக்கொள்வது அவசியம் என்றும் பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம் இதனை ஜனநாயகக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். நாம் மக்களைச் சந்திக்கச் சென்று, அவர்களின் விருப்பங்களை அறிகின்றோம். அதேப்போல் சர்வதேசத்தையும் சந்திக்கின்றோம். எனவே அவர்கள் எமது நிலைத்தன்மையைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.
19 அரசமைப்பு திருத்தம் மட்டுமல்ல அரசமைப்பின் ஏனைய சரத்துக்களையும் நாம் படிக்க வேண்டும். அந்த அரசமைப்பின் படி தேர்தலை அறிவிக்கும் சந்தர்ப்பம் ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே ஜனாதிபதியின் செயல் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் அல்லவென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
30 minute ago
35 minute ago