Niroshini / 2021 மே 24 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டுக்குள் இடம்பெற்றுவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதால், நாளுக்கு நாள், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, உயிரிழப்போரின் தொகையும் அதிகரித்து வருகின்றதென, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையொன்றை இந்த அரசாங்கம் மேற்கொண்டிருக்காமையே, இன்றைய இந்த நிலைமைக்குக் காரணமென்றும், இந்த நிலைமைக்கு, அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் நேற்று (23) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்துரைத்துள்ள மரிக்கார் எம்.பி, “கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் பணிகளை விரைவில் ஆரம்பிக்குமாறு, நாங்கள் பல முறை வலியுறுத்தியிருந்தோம். ஆனால் இந்த அரசாங்கம், தேசிய மருத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து, பாணியொன்றின் பின்னால் சுற்றித்திருந்தது. இதனால், இன்று மக்கள் மரணிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
“இன்றுள்ள நிலைமையில், நாட்டைத் தற்காலிகமாக முடக்குவதே, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழியாகும். விசேட வைத்திய நிபுணர்கள் கூறுவதையே, இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதனால், அவ்வாறான விசேட வைத்திய நிபுணர்கள் கூறுவதைக் கேட்டு, நாட்டை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு, அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்” என, மரிக்கார் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.
9 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago