2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘த.தே.கூவின் தேவைக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கப்படாது’

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்கேற்ப, அமைச்சரவைத் தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாதெனவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.   

அமைச்சரவைக்குள் எடுக்கப்படும் தீர்மானங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்கேற்பவே எடுக்கப்படுவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் தெரிவித்ததாக, ஊடகங்கள் சில வெளியிட்டுள்ள கருத்துகள் குறித்து விளக்கம் அளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.   

இது தொடர்பில் தொடர்ந்து பதிலளித்துள்ள அமைச்சர் திகாம்பரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் இலாபம் கருதி, இவ்வாறான கருத்துகளை வெளியிட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .