Janu / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் பூர்வீக தாயகமான வடக்கு கிழக்கில் தமிழ் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் அரச கொள்கையின் திட்டமிட்ட தொடர்ச்சியாக கிவுல் ஓயா திட்டம் அமைகிறது எனத் தெரிவித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சபைக் கூட்டம் இடம்பெற்றது. கிவுல் ஓயா திட்டம் தொடர்பான பிரேரணை சபையில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்னால் முன்வைக்கப்பட்டது. இப் பிரேரணையினை சபையில் முன்வைக்க முடியாது என மத்தியில் ஆளும் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். அவ் எதிர்ப்பையும் மீறி தமிழ்க் கட்சிகள் அனைத்தும் பிரேரணைக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியினரின் கருத்தை எதிர்த்தன. இறுதியில் தேசிய மக்கள் சக்தியினர் நிகழ்ச்சி நிகழ்ச்சி நிரலில் இல்லாததை எவ்வாறு தவிசாளர் சபைக்கு ஆற்றுப்படுத்த முடியும் என வாதிட்டனர்.
நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாத ஒன்றை சபையின் அனுமதியுடன் தவிசாளர் அறிவிப்பாக முன்வைப்பதற்கு ஏற்பாடுகளில் இடமுண்டு. எனவே தயவு செய்து இனம் சார்ந்த பிரச்சினையில் உங்கள் கட்சி சார்ந்த நிலைப்பாடுகளுக்காக நீங்கள் தடையை ஏற்படுத்தாதீர்கள் என பல தடவைகள் தேசிய மக்கள் சக்தியினரின் வினயமாகக் கோரினார். எனினும் கூச்சல் தொடர்ந்தது.
தவிசாளர், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான காரணங்களுள் ஒன்றாக அரச அனுசரனையுடன் திட்டமிட்ட சிங்கள பேரினவாத குடியேற்றங்கள் வரலாற்று ரீதியாக இடம்பெற்றுள்ளன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அதிகாரசபைகள் ஊடாக குறிப்பாக மகாவலி அதிகார சபை ஊடாக ஏற்கனவே பல சிங்கள குடியேற்றங்கள் தமிழர் இன விக்தாசாரத்தினையும் அடையாளத்தினையும் இருப்பையும் அழிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன. அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூறாது இனப்பிரச்சினை தீர்வை முன்வைக்காது கடந்த அரசாங்கங்கள் போலவே தொடர்ந்து செயற்படுகின்றது. அதை ஏற்க முடியாது. ஆரம்பமாக அரசாங்கம் 2500 மில்லியன்களை ஒதுக்கி சூட்சுமமான முறையில் ஆரம்பித்துள்ள இத்திட்டத்தினை எதிர்கின்றோம். மேலும் பல கோடிகள் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படவுள்ள நிலையில் அரசாங்கம் தமிழர்களின் வரலாற்றத் தாயக இயல்பு வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
தவிசாளரை உரையாற்ற விடாது செயற்பட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினரை ஒரு மாத காலத்திற்கு சபையில் இருந்து வெளியேற்ற வேண்டிவரும் என தவிசாளர் எச்சரித்த நிலையில் சபையில் சற்ற அமைதி ஏற்பட்டது. இதில் சபை உறுப்பினர்களின் விவாதத்திற்கு அனுமதிக்கப்பட்டது. விவாதத்தில் தேசிய மக்கள் சக்தியைத் தவிர பிரசன்னமாகியிருந்த தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் கண்டனத் தீர்மானத்திற்கு முழு ஆதரவைத் தெரிவித்தனர்.
இந் நிலையில், சபையில் தேசிய மக்கள் சக்தியின் ஒன்பது உறுப்பினர்களில் தலைமை தாங்கும் உறுப்பினர் இத் தீர்மானத்திற்கு எதிராகவும் ஏனைய எட்டு உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர். தேசிய மக்கள் சக்தியைத் தவிர தமிழ்க் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

19 minute ago
30 minute ago
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
48 minute ago
53 minute ago