2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தேர்தல் நிர்ணய அறிக்கை பூர்த்தி

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. அவ்வறிக்கையினை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. 

நாடாளுமன்ற அமர்வின்போது இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று பிரதமர், ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. 

குறிப்பிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று, ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. 

இதனால், பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில், கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .