Lenin Raj / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பான அண்மைய தீர்மானம், சலுகைகளை அதிகரிப்பதற்கான ஒன்றல்ல என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர வௌயிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கிடும் முறை: பொதுவாக ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி நிலவும் சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டே எரிபொருள் கொடுப்பனவு கணக்கிடப்படுகிறது.
ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவைக் கணக்கிட, 2026 மார்ச் முதலாம் திகதியன்று இருந்த எரிபொருள் விலை அளவுகோலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
அதற்கு அமைச்சரவை அனுமதி அங்கீகாரமும் வழங்கியுள்ளது.
மார்ச் மாதத்தில் எரிபொருள் விலைகள் இரண்டு முறை திருத்தப்பட்டமைக்கு இணங்க விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொடுப்பனவாக வழங்கப்படும் பணத்தின் அளவு மாறாமல் இருந்தாலும், அந்தப் பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருளின் அளவு (லீற்றர்) குறைந்துள்ளது.
இது கொடுப்பனவில் செய்யப்பட்ட அதிகரிப்பு அல்ல. மாறாக, தற்போதைய விலைகளுக்கு ஏற்ப கொடுப்பனவு மாற்றியமைக்கப்படாததால், உண்மையில் எரிபொருள் உரிமம் குறைக்கப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago